குழந்தைகள், பெண்களுக்கான நலத்திட்டங்கள்

0
0

சரத்து 24, குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பற்றியதாகும். இது குழந்தை தொழிலாளர் முறையிலிருந்து அவர்களை பாதுகாக்க உதவுகிறது.

சரத்து 39 குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது.

இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம் 1986ல் நிறைவேற்றப்பட்டது.

தாய்ப்பாலுக்கு மாற்றாக உணவுப்புட்டிகள் மற்றும் குழந்தைகள் உணவுத்திட்டம் 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் உடல்நலம் பாதுகாத்தல்)1975

ராஜீவ்காந்தி குழந்தை காப்பகத் திட்டம் – 2006

கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் – 01.04.2010

73-வது, 74-வது சட்டத் திருத்தம் ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருகிறது.

சுயம்ஸிதா திட்டம், பெண்கள் சுய உதவி குழுக்கள் போன்ற திட்டங்கள் வழியாக பெண்களின் அதிகார குவிப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது

1978ல் உருவாக்கப்பட்ட குழந்தைத் திருமண தடைச்சட்டத் திருத்தம் பெண்களின் திருமண வயதை 15-லிருந்து 18 ஆக உயர்த்தியுள்ளது

1997 –ம் ஆண்டு தமிழக அரசு ஈவ் டீசிங் தடைச்சட்டம் இயற்றியது.

சமூக அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிவுரை வழங்கும் மையமாக குடும்ப ஆலோசனை மையங்கள் செயல்படுகின்றன.

1961ல் வரதட்சணை தடைச்சட்டம் வரதட்சணை கொடுப்பதையும் வாங்குவதையும் தடை செய்தது.

1986—ம் ஆண்டு வரதட்சணை தடைச்சட்டம் (திருத்தம்),, வரதட்சணை வாங்குபவர், வரதட்சணை தொடர்பாக பெண்களை கொடுமைப்படுத்துபவர்  மீது கடும் தண்டனை கொடுக்க வழி வகுத்துள்ளது.

அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 23 மற்றும் 24, பெண்களின் விடுதலை பற்றிக் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here