மனித மூளை

0
0

மனித மூளை பாதுகாப்பாக மண்டையோட்டினுள் உள்ளது.
மூளையை சுற்றி பாதுகாப்பாக பயாமேட்டர், அரக்னாய்டு சவ்வு, டியூராமேட்டர் எனும் மூன்று மூளை சவ்வுகள் உள்ளன .
வளர்ச்சி அடிப்படையில் மூளையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.அவை: முன் மூளை, நடு மூளை, பின் மூளை
முன் மூளை (புரோசன்செஃபலான்):
முன் மூளையில் பெருமூளையும், டையன் சிஃபலானும் அடங்கும்.
பெருமூளை இரு அரைக் கோளங்களாலானது. இக்கோளங்கள் அடிப்புறத்தில் கார்ப்பஸ் கல்லோசம் என்னும் நரம்பிழையால் இணைந்துள்ளது.
பெருமூளையின் வெளிப்பகுதி சாம்பல் கார்டெக்ஸ் ஆகும்.
உள்பகுதி வெள்ளைநிற பொருளால் ஆனது.
கார்டெக்ஸின் மேல்புறத்தில் கைரை என்னும் மடிப்புகளும், சல்சை என்னும் சிறு பள்ளங்களும் உள்ளன.
ஒவ்வொரு பெருமூளை கோளங்களும் ஃப்ராண்டல், பெரைட்டல், டெம்போரல், ஆக்சிபாடல் என்று நான்கு கதுப்புகளாலானது.
டையன் சிஃபலான் தலாமஸ் – ஹைப்போதலாமஸ் என்னும் பகுதிகளால் ஆனது. இது பெருமூளைக்கும் – மூளைத் தண்டிற்கும் இடையே உள்ளது.
ஹைப்போதலாமஸ் பரிவு நரம்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஹைப்போதலாமஸின் அடிப்பகுதியில் புனல் போன்ற இன்ஃபன்டிபுலம் உள்ளது. இன்ஃபன்டிபுலம் பிட்யூட்ரியின் நியூரோ ஹைப்போயைவுடன் தொடர்பு உள்ளது.
இடைமூளை (மீசன் சிஃபலான்):
இதில் கார்போரோ குவாட்ரிஜெமினா என்ற நான்கு சிறிய வட்ட வடிவ உறுப்புகள் உள்ளன.
பின்மூளை (ரோம்பன் சிஃபலான்): சிறுமூளை, முகுளம், பான்ஸ்வரோலி எனும் மூன்று பகுதிகளை கொண்டது பின்மூளை.
சிறுமூளை இரு கதுப்புகளால் ஆனது. ஃபோலியா எனப்படும் மடிப்புகள் உண்டு.
சிறுமூளை ஃபிளாக்கோ நோடுலார் கதுப்பு, வெர்மிஸ், பக்க கோளங்கள் என்னும் மூன்று பகுதிகளை உடையது.
ஃபிளாக்கோ நோடுலார் கதுப்பு: இது சிறுமூளையில் சிறிய மேல் அமைப்புகள்.
வெர்மிஸ்: குறுகிய மையப் பகுதி.
பக்க கோளங்கள்: இரண்டு பெரிய அரைக் கோளங்கள்.
பான்ஸ்வரோலி: முகுளத்தின் மேல் அமைந்துள்ள இப்பகுதி, உட்செல், வெளிசெல் நரம்புகளின் பாதையாக உள்ளது.
முகுளம்: மூளைக்கும், தண்டுவடத்திற்கும் இடையே இணைப்பு பாலமாக உள்ளது முகுளம்.
மூளைத்தண்டு: முகுளம், பான்ஸ், இடைமூளை ஆகிய மூன்று பகுதிகளும் மூளைத்தண்டு எனப்படும் தண்டுவடத்தை மூளையுடன் இப்பகுதி இணைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here