ஆரிய சமாஜம்

0
2

சுவாமி தயானந்த சரஸ்வதி என்பவரால் 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் கத்தியவார் மாகாணத்தில் “மூர்வி” எனும் இடத்தில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் மூல் சங்கர் .

சிறுவயதிலேயே துறவறம் பூண்டு பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து, சமஸ்கிருதம் பயின்று அம்மொழியில் புலமை பெற்று விளங்கினார்.

இவர் சுவாமி விராஜனந்தரின்சீடர் ஆவார்.

சுவாமி தயானந்தர் வேதங்களில் கூறப்பட்டுள்ள அனைத்துமே உண்மை என கண்டறிந்தார். எனவே, வேதங்களை பரப்புவதிலேயே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

வேதங்களை நோக்கி செல்’என்பதே இவரது குறிக்கோளாகும்.

வேதகால சமூகத்தில் நிலவிய நல்ல பண்புகளை எடுத்துக் கூறி மக்களிடையே சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்தார்.

ஆரிய சமாஜம் விலங்குகளை பலியிடுதல், உருவ வழிபாடு, மூட பழக்கங்கள், சொர்க்கம், நரகம் போன்ற கோட்பாடுகளை எதிர்த்தது.

மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்தில் சேர்ப்பதற்கு ‘சுத்தி இயக்கம்’ என்ற இயக்கத்தை தொடங்கினார்.

ஆரிய சமாஜம் குழந்தை திருமணம், பலதார மணம், பர்தா அணியும் முறை, உடன்கட்டை ஏறும் வழக்கம் போன்றவற்றை எதிர்த்தது.

பெண் கல்வி, கலப்பு மணம், சமபந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக பாடுபட்டது.

வேதம் மற்றும் ஆங்கில வழி கல்வியைபயிற்றுவிப்பதற்காக தயானந்தா வேதிக் பள்ளிகள் (D.A.V. – Dayanand Anglo Vedic Schools)  மற்றும் கல்லூரிகளை நிறுவினார்.

தயானந்தரின் முக்கிய சீடர்களான லாலாலஜபதிராய், லாலா ஹன்ஸ்ராஜ் மற்றும் பண்டித குருதத் ஆகியோர் ஆரிய சமாஜ கொள்கைகளை பரப்பினர்.

பாலகங்காதர திலகர் மற்றும் கோபாலகிருஷ்ண கோகலே போன்றோர் ஆரிய சமாசத்தின் தத்துவங்களிலும் கோட்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.

‘சுதேசி’ மற்றும் ‘இந்தியா இந்தியருக்கே’போன்ற முழக்கங்களை முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.

இவர் இந்து சமயத்தின் ‘மார்ட்டின் லூதர்’ என அழைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here