அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு  

0
0

மருத்துவத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில், சாதனை படைப்போருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.உலக மக்கள் நன்மைக்காக செயல்பட்டோருக்கு, அமைதிக்கான, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2017க்கான, மருத்துவ நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டது.

இந்த அறிஞர்கள் மனிதனின் தூக்க வடிவமாக, உயிரியல் கடிகாரமாக கருதப்படும் நடத்தை, உணவு, ஹார்மோன் வெளியீடு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் உடலில் செயல்படும், உயிரியல் கடிகாரம் குறித்த ஆய்வுக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, விஞ்ஞானிகள் மூவருக்கு, இந்த பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரியல் கடிகாரத்தின் அடிப்படையில், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட, அமெரிக்க விஞ்ஞானிகள் ஜெப்ரி சி ஹால் (72), மைக்கேல் ரோஸ்பாஸ் (73), மைக்கேல் டபிள்யூ யங் (68)  ஆகியோருக்கு, இந்த ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசு தொகையான ஏழு கோடி ரூபாய்  இவர்கள் மூவருக்கும், சமமாக பிரித்து வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here