பெயர்ச்சொல்

0
0
பெயர்ச்சொல்:
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
எ.கா: செடி, மரம், புத்தகம், மலர், மனிதன், உலகம்
பெயர்ச்சொல்லின் வகைகள்:

1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்

பொருட்பெயர்:
பொருளைக் குறிப்பது பொருட்பெயர்.
எ.கா: கட்டில், நாற்காலி, அரிவாள்
இடப்பெயர்:
இடத்தைக் குறிப்பது இடப்பெயராகும்.
எ.கா: இந்தியா, உசிலம்பட்டி, மதுரை, சென்னை
காலப்பெயர்:
காலத்தை குறிப்பது காலப்பெயர் ஆகும்.
எ.கா: மணி, நிமிடம், நொடி
சினைப்பெயர்:
உறுப்பைக் குறிப்பது சினைப்பெயர் ஆகும்.
எ.கா:  கை, கால், மூக்கு, இலை, கிளை, கொம்பு, வால்
பண்புப்பெயர்:
குணத்தை அல்லது பண்பை குறிப்பதாகும்.
எ.கா: சிவப்பு சட்டை, பச்சை வயல், ஊதா சட்டை
தொழிற்பெயர்:
தொழிலை குறிக்கும் சொல் தொழிற்பெயர் ஆகும்.
எ.கா:  ஆடுதல், பாடுதல், நடத்தல்
சில எடுத்துக்காட்டுகள்:பொருட்பெயர் காலப்பெயர் இடப்பெயர் சினைப்பெயர் பண்புப்பெயர் தொழிற்பெயர்
மலர் கிழமை அண்ணா நகர் நாக்கு நீலம் தேடுதல்
வண்டி மாதம் பள்ளி விரல் நல்லன் விற்றல்
கணிப்பொறி ஆண்டு வீடு கண் செம்மை நடித்தல்
கண்ணாடி நாள் திருச்சி காது சிறுமை நட்டல்
பொம்மை நிமிடம் கோவில் வாய் கருப்பு ஓடுதல்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here