லக்னோ ஒப்பந்தம்–(1916)

0
0
சூரத் பிளவுக்குப் பிறகு காங்கிரசின் மிதவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைக்க திலகரும், கோகலேவும் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

1916 டிசம்பர் மாதம் அம்பிகா சிரான் மஜும்தார் தலைமையில் காங்கிரஸ் மாநாடு லக்னோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திலகர் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையில் தனித்தனியே செயல்பட்டு வந்த சுயாட்சிக் கட்சியினர் முறைப்படி காங்கிரசில் சேர்ந்தனர்.

1916- ம் ஆண்டு முஸ்லீம் லீகின் தலைமை பொறுப்பேற்ற முகமது
அலி ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் கூட்டமும் லக்னோவில் நடைபெற்றது.

இக்காலக்கட்டத்தில் ஜின்னா   அகில இந்திய கண்ணோட்டத்தோடு சமய சார்பற்ற நாட்டுப்பற்று மிக்க தேசியவாதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திலகர் காங்கிரசையும், முஸ்லிம் லீகையும் ஒருங்கிணைக்கும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு அதில் வெற்றி கண்டார். லக்னோ உடன்பாடு ஏற்படுவதற்கு திலகர் முக்கியக் காரணமாக இருந்தார் எனலாம்.

மிதவாதிகளும்,தீவிரவாதிகளும் ஒன்றிணையவும் முஸ்லிம் லீகும் காங்கிரசும் இணையவும் லக்னோ உடன்பாடு (1916) வழி செய்தது. இது காங்கிரஸ் லீக் திட்டம் என்றும், லக்னோ ஒப்பந்தம் என்றும் குறிப்பிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here